download 8 1 16
இலங்கைசெய்திகள்

மே 15ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரியர் நியமனங்கள்!

Share

மே 15ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரியர் நியமனங்கள்!

தேசிய கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் கற்கைநெறியை நிறைவு செய்த டிப்ளோமா தாரிகளுக்கு மே 15ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற ஒன்றுகூடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், கல்வியல் கல்லூரியில் டிப்ளமோ பாடநெறியை பூர்த்தி செய்த 8000 பேரை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அண்மையில் கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.

இதனடிப்படையில், நாடளாவிய ரீதியில் வெற்றிடம் காணப்படும் பாடசாலைகளில் குறித்த ஆசிரியர்கள் கடமையாற்றவுள்ளதாகவும் விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்காக பல்வேறு பாடசாலைகளிலும் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் கல்வி அமைச்சு முன்னர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையர்களின் அதீத சீனிப் பயன்பாடு: ஈறு நோய் பாதிப்பு அதிகரிப்பு – எச்சரிக்கை விடுத்த வைத்தியர்!

இலங்கையில் ஒவ்வொரு இரண்டு பெரியவர்களில் ஒருவருக்கு ஈறு தொடர்பான நோய்கள் இருப்பதாக வாய் சுகாதார விசேட...

09 6
செய்திகள்இலங்கை

பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அரச அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு: பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக ஏற்பட்ட பேரிடர் நிலைகளின் போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில்...

08 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விநியோகத்தை எளிமைப்படுத்தும் புதிய செயலி: யாழ். இந்துக் கல்லூரி மாணவரின் புத்தாக்கம்!

எரிபொருள் விநியோகத்தில் நிலவும் சவால்களைத் தொழில்நுட்ப ரீதியாகத் தீர்க்கும் நோக்கில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உயர்தர...

01 6
செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் மற்றும் அவரது துணைவர் சடலமாக மீட்பு: காவல்துறை விசாரணை!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள லோட்ரோப் பள்ளத்தாக்கு பகுதியில், ஹேர்ன்ஸ் ஓக் (Hernes Oak) எனும் கிராமப்புறப்...