images 1 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஆசிரியர் மாணவிகளுடன் பாலியல் சேட்டை!

Share
வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபடுகின்றார் என எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில்  சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்கும் மாணவிகளுக்கு கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர் ஒருவர் , மாணவிகளுடன் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுதல் , பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அந்நிலையில் மாணவி ஒருவர் பெற்றோர்களிடம் முறையிட்ட நிலையில் பெற்றோர் பாடசாலை அதிபரை நேரில் சந்தித்து ஆசிரியரின் செயற்பாடு குறித்து எடுத்து கூறி நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்.
அதற்கு அதிபர் , சாதகமாக நடந்து கொள்ளாது. முறையிட்ட பெற்றோருடன் முரண்பட்டதை அடுத்து பெற்றோர் மாணவியின் பாடசாலை விலகல் பாத்திரத்தை வாங்கி கொண்டு மாணவியை வேறு பாடசாலையில் இணைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் , மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் அவதானம் செலுத்தியுள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.-

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...