image ea37ed4f42
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சமுர்த்தி அபிவிருத்தி சந்தைகள் ஆரம்பம்!!

Share

முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலகங்களில்  சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் விற்பனை சந்தைகள் திங்கட்கிழமை (10) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

துணுக்காய்,மாந்தை கிழக்கு,ஒட்டுசுட்டான்,புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் பிரதேச செயலகங்களில் சமுர்த்தி பயனாளிகளின்  உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் நோக்கிலான சந்தைகளே ஆரம்பித்துவைக்கப்பட்டன.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும், பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் அபிமானி  விற்பனை  சந்தையினை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் ஆரம்பித்துவைத்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் க.விமலநாதன் மற்றும் மாவட்ட சமூர்த்தித்திணைக்கள பணிப்பாளர் மற்றம் பிரதே செயலாளர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்பட்ட மாவட்ட அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ணத்துக்கான விளையாட்டுப்போட்டியில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளது.

இதில் கலந்துகொண்ட அனைத்து அரச உத்தியோகத்தர்களையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் சான்றிதழும்,நினைவுச்சின்னமும் மாவட்டஅரசாங்க அதிபரினால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...