download 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் அதிகரித்துள்ள மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள்!

Share

ஆவரங்கால் சிவசக்தி திருமண மண்டபத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த HT 5084 இலக்கமுடைய நீல நிற ஹொன்டா சூப்பர் கப் 90 வகை மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (10) ஆவரங்கால் சிவசக்தி திருமண மண்டபத்திற்கு முன்பாக நிறுத்தி வைத்துவிட்டு திருமணத்திற்கு சென்று திரும்பி வந்த பார்த்த போதே குறித்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

முற்பகல் 10.30 தொடக்கம் 12.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்திலேயே மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது.

இத்திருட்டு தொடர்பாக உரிமையாளரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிள் தொடர்பான விபரம் அறிந்தவர்கள் உரிமையாளரான சு.பாலசுப்பிரமணியம் 0777655527 என்பவரது இலக்கத்திற்கோ அல்லது அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்க முடியும்.

அண்மைக்காலங்களில் யாழ்குடாநாட்டில் மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...