7nA3YEWYHms8RilJwwHe 1
இலங்கைசெய்திகள்

பால்மா விலையில் மாற்றம்!

Share

பால்மாக்களின் விலைகள் எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடையக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் பால்மாக்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டது.

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதி ஒன்று ஆயிரத்து 120 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் மூவாயிரத்து 100 ரூபாவாக நிலவிய ஒரு கிலோ கிராம் பால்மா பொதியின் விலை 200 ரூபாவால் குறைக்கப்பட்டு 2 ஆயிரத்து 900 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஜூன் மாதமளவில் மேலும் பால்மா பொதிகளின் விலை குறைவடையக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் அங்கத்தவர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...