சதொச ஊடாக இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் விற்பனை: வெளியான அறிவிப்பு
இந்தியாஇலங்கைசெய்திகள்

அடுத்த தொகுதி முட்டை நாட்டுக்கு!!

Share

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மற்றுமொரு தொகுதி முட்டைகள் நேற்று (04) இரவு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதுவரை 04 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.

கடந்த 23 ஆம் திகதி முதல் தடவையாக 2 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், சுமார் 4 நாட்களுக்கு முன்னர் மேலும் 1 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த முட்டை இருப்பு விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

நேற்றிரவு இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்று (05) ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை சாதாரண நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 72
செய்திகள்உலகம்

ஆர்ட்டெமிஸ் II விண்வெளி வீரர்களுக்கு டொனால்ட் டிரம்ப் பாராட்டு: வெள்ளை மாளிகையில் சந்திக்க விருப்பம்!

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்கலக் குழுவினர் நிலவைச் சுற்றி வந்து பூமியில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதைத்...

world 71
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டில் உரங்களுக்குத் தட்டுப்பாடு இல்லை: உர மானியத்தையும் உயர்த்திப் பிரதி அமைச்சர் உறுதி!

நாட்டில் உரங்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்றும், எதிர்வரும் சாகுபடிப் பருவத்திற்குத் தேவையான அளவை விட...

world 70
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று நண்பகலில் பல பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில்: மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் நிலப்பரப்பிற்கு மேலாக சூரியனின் வருடாந்த தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, இன்று (ஏப்ரல் 11,...

world 69
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வேரஹேராவில் போலி சாரதி அனுமதிப்பத்திர மோசடி முறியடிப்பு: பாதுகாப்பு அதிகாரி உட்பட இருவர் கைது!

வேரஹேராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு (DMT) வருகை தரும் நபர்களை ஏமாற்றி, போலி சாரதி...