speaker mahinda yapa abeywardena 700x375 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

வாக்குச்சீட்டுகள் அழிப்பு! – சபாநாயகர் தெரிவிப்பு

Share

ஜனாதிபதியாக விருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து பாராளுமன்றத்தில் இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் போது அளிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் சட்டத்தின் பிரகாரம் அழிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (04) செவ்வாய்க்கிழமை விசேட அறிவிப்புக்களை விடுக்கும்போதே போது இந்த அறிவிப்பை விடுத்த அவர் மேலும் கூறுகையில், .

2022.07.20 ஆம் திகதி பராளுமன்றத்தில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்புக்கான அளிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் ஜனாதிபதி தெரிவு விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் 18 ஆவது உறுப்புரையின் பிரகாரம் மற்றும் 2023.03.24 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு தெரிவு குழுவின் அனுமதிக்கு அமைய பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் அழிக்கப்பட்டது என்றார்.

இந்த இரகசிய வாக்கெடுப்பில் ஆளும் தரப்பின் வேட்பாளரான பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளையும்,எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் டலஸ் அழகபெரும 82 வாக்குகளையும்,தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் 3 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய நாட்டின் 8 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

இவ்வாறான பின்னணியில் அளிக்கப்பட்ட இரகசிய வாக்குச்சீட்டுக்கள் இடைக்கால ஜனாதிபதி தெரிவு சட்டத்தின் சிறப்பு சட்டத்தின் 18 ஆவது உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் அழிக்கப்பட்டன

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...