Jeevan Thondaman
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வெடுக்குநாறி விவகாரம் – நானே சென்று மீண்டும் பிரதிஷ்டை செய்வேன்!!

Share
வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் சிலை உடைத்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி முழுமையானதோர் அறிக்கையை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தான் வவுனியா, வெடுக்குநாறி மலைக்கு செல்வேன். அங்கு சேதமாக்கப்பட்ட சிலைகள் மீள் பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

வவுனியா, நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் சிலை உடைத்து வீசப்பட்ட அதேபோல  விக்கிரகங்களும் மாயமாகியுள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

” சம்பவம் தொடர்பில் அறிந்த பின்னர் நானும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தினோம். உரிய விசாரணைகளை முன்னெடுத்து, சட்டத்தை செயற்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். நானும் இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளேன்.

இலங்கை முன்னேறுவதற்கு இன, மத நல்லிணக்கம் என்பது மிக முக்கியம். அதனை ஏற்படுத்துவதற்கு எமது அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் அதனை சீர்குலைக்கும் வகையில் இடம்பெறும் சம்பவங்கள் அனுமதிக்க முடியாது. அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ” – என்றும் ஜீவன் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
கன்னியா வெந்நீரூற்று
இலங்கை

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கை.

ஆட்சிக்கு வரும்போது, நாட்டில் வாழும் அனைவரும் சமம் என கூறி ஆட்சியை பிடித்த அரசாங்கம் தற்போது...

சுரேஸ் பிரேமச்சந்திரன்
இலங்கை

குற்ற செயல்களில் தற்கால அரசுக்கும் பங்குண்டு – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மட்டக்களப்பு – வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற...

சுகீஸ்வர பண்டார
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளருக்கு விளக்கமறியல்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30...

காணாமல் ஆக்கப்பட்டோர்nnnn
இலங்கை

அவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை – தூதுக்குழுவினரின் வருகையினை தொடர்ந்து வந்துள்ள கருத்து.

இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர்...