சுகீஸ்வர பண்டார
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளருக்கு விளக்கமறியல்.

Share

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு அரசாங்க நிறுவனங்களிலிருந்து சம்பளம் பெற்று, அதன் மூலம் அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான தொடர் விசாரணையின் அடிப்படையில், சுகீஸ்வர பண்டார ஜூன் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனிடையே , ஜனாதிபதியின் செலவினத் தலைப்பின் கீழ் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக, சிறப்பு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் (CCIB) முறைப்பாடு செய்துள்ளது.

இது தொடர்பான விசாரணையில், பண்டார 2022 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேகச் செயலாளராகப் பணியாற்றியதும், அதே காலகட்டத்தில் ஜனாதிபதி செயலகத்தில் திட்டப் பணிப்பாளர் பதவியை வகித்ததும் தெரியவந்துள்ளது.

இன்று, இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த விளக்கமறியல் உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

 

Share
தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...