1680023624 1680022821 cpc L
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விநியோகத்துக்கு பாதுகாப்பு தரப்பினர்!!

Share

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினரின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக எரிபொருள் விநியோகம் தடைப்பட்டிருந்த போதிலும் தற்போது அது வழமைக்குத் திரும்பியுள்ளது.

மேலும், நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்காரணமாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் அனாவசியமாக வரிசையில் நிற்க வேண்டாம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...