Education 2
இலங்கைசெய்திகள்

இடைநிலை வகுப்புகளுக்கு அனுமதி – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Share

இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ள பதிவு செய்யும் கடிதங்களை வெளியிடாது இருக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பத்திரத்திற்கு இன்று அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார்.

எனவே, முதலாம் ஆண்டிற்கு மாணவர்களை இணைக்கும் நடவடிக்கைகளும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையைத் தொடர்ந்து தரம் 6 இற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும்  நடவடிக்கைகளும் தற்போது நடைபெற்று வருவதால் சித்திரைப் புத்தாண்டிற்குப் பின்னர் இது தொடர்பான அறிவித்தல் வெளியாகும் என அவர் தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட சேர்க்கைகள் முடிந்தவுடன் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என அவர் தெரிவித்தார்.

மாதிரி விண்ணப்பப் படிவம் ஒன்று ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு பின்னர் பொது அறிவிப்பு மூலம் வெளியிடப்படும். நிரப்பப்பட்ட படிவங்கள் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை இணைக்க விரும்பும் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கையின் படி ஒரு குறிப்பிட்ட மதிப்பெண் திட்டத்தின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.

புதிய அமைப்பின் பிரகாரம் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை பாடசாலையில் இணைக்க  கல்வி அமைச்சிற்கு வந்து தமது நேரத்தை  வீணடிக்கத் தேவையில்லை.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...