ரணில் அரசியல் ஏமாற்று வித்தை காட்டினால் பேச்சு மேசையை விட்டு உடன் வெளியேறுவோம்! எதிர்க்கட்சி சாடல்
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டை சீரழிப்பது அரசே – சஜித் குற்றச்சாட்டு!

Share

இந்நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை அழிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவது தற்போதைய
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே எனவும், இந்நேரத்தில், நமது நாட்டு மக்களின் அடிப்படை உரிமையான சர்வஜன வாக்குரிமையை சீர்குலைத்து உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு பல சதித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றத்தின் உதவியை நாடியபோது, உயர் நீதிமன்றம் அதை பரிசீலித்து இடைக்கால உத்தரவை பிறப்பித்து தேர்தலுக்கு ஒதுக்கப்படும் பணத்தை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என கூறியிருந்தாலும், அரசாங்கம் தனக்கு விசுவாசமான இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி இந்த முடிவை சவாலுக்குட்படுத்தியதாகவும், இதன் காரணமாக ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நீதித்துறை, சட்டவாக்கத்திற்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில் பாரிய நெருக்கடி நிலை உருவாகியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (24) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.

சட்டவாக்கம் நெருக்கடியை ஏற்படுத்தி நாட்டின் ஜனநாயகத்தை அழிக்க ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கடுமையாக முயற்சிப்பதாகவும், இந்த முயற்சிகளை மிகவும் வெறுப்புடன் கண்டிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நீதித்துறை உறுப்பினர்கள் அனைவரினதும் கண்ணியமான இருப்புக்காக எதிர்க்கட்சியாக முன்நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் மற்றும் பாராளுமன்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி நீதிபதிகளை சங்கடப்படுத்துதல் அவமதிப்புகளுக்குட்படுத்துதல், வரப்பிரசாத குழுக்கு அழைத்து மானவங்கப்படுத்துவதன் மூலம், நீதிமன்றத்துறையில் தலையீடு செய்ய ஆயத்தமாகுவதாகும் எனவும், ஜனநாயகத்தைப் போற்றும் ஒரு மக்கள் பிரதிநிதியாக இதை வன்மையாக கண்டிப்பதாகவும், இந்த சதிகளை முறியடிக்க இன, மத பேதமின்றி அனைவரும் கைகோர்க்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே, அனைத்து அரசியல் சதிகளையும் கைவிட்டு மக்கள் கோரும் தேர்தலை நடத்துமாறும், இல்லையெனில் சில தரப்புகள் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடலாம் என்பதனால், நாட்டில் இவ்வாறான பாதகமான நிலைமைகள் ஏற்படுவதற்கு முன்னர் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை பாதுகாக்குமாறு ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...

7003785 rain
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மழை நீடிக்கும்: 5 மாவட்டங்களுக்குப் பலத்த மழை மற்றும் காற்று குறித்த எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்குப் பலத்த மழை மற்றும் காற்று வீசக்கூடும் என...

7003785 rain
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகாவலி கங்கை பெருக்கெடுப்பு: 8 பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை; சோமாவதிய யாத்திரையைத் தவிர்க்குமாறு கோரிக்கை!

மகாவலி கங்கை ஆற்றுப் படுக்கையின் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, அடுத்த...