EGG 1
இந்தியாஇலங்கைசெய்திகள்

முட்டை இறக்குதி விவகாரம் – இந்தியா பறந்தார் முக்கியஸ்தர்!!

Share

இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து விசாரிப்பதற்காக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் இந்தியா சென்றுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அவர் இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள முட்டைகள் தொடர்பான அறிக்கை மற்றும் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஆராய்வது இந்த விஜயத்தின் நோக்கமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நாட்டில் முட்டையின் விலையை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அதன் முதல் தொகுதியாக 2 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட முட்டைகளுக்கு இந்திய விலங்குகள் மற்றும் சுகாதாரத் துறை வழங்கிய தரநிலை அறிக்கை இன்னும் வரவில்லை என்று அரசாங்க வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நேரடியாக ஆராய்ந்து முட்டைகளை விரைவில் இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அரசாங்க வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர இந்தியா சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...