“தனிப்பட்ட ஒருவரின் நிலைப்பாட்டுக்காக அரசியலமைப்பை மீறுவதை அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேர்தல் “எப்போது நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குக் கிடையாது” என்றார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
கீழ் மட்ட ஜனநாயகத்தை வெளிப்படுத்தும் முக்கிய இடமே உள்ளூராட்சி சபைகள். அதனைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும். இப்போதும் மாகாண சபைகள் செயற்படாத நேரத்தில்,
அவை நிறைவேற்று கரங்களுக்குள் இருக்கும் நேரத்தில், உள்ளூராட்சி தேர்தலையும் நடத்தாது இருப்பது ஜனநாயகத்தை சீர்குலைப்பதாகவே பார்க்கின்றோம்.
உள்ளூராட்சி சபைகள் தேர்தலை நடத்துவதை தடுக்க இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளைப் பார்க்கும் போது அவை ஜனநாயகத்துக்கான அடியாகவே உள்ளன.
உள்ளூராட்சி சபைகள் மூலம் மக்களுக்கு சேவைகள் கிடைக்கின்றன. 4 வருடங்களுக்காக அவை செயற்படுகின்றன. ஒரு வருடத்துக்கு உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலத்தை அதிகாரித்தாலும் அதன் பின்னர் நீடிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment