dinesh gunawardena 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் தலையிட போவதில்லை!!

Share

தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு ஒரு தீர்மானத்தை எடுக்கும்.தேர்தல்கள்  ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் நாம் தலையிட போவதில்லை என தெரிவித்த என பிரதமரும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான  தினேஷ் குணவர்தன, உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவுக்கு அமைய அரச அதிகாரிகள் செயற்படுவார்கள் என்றார்.

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் நிறைவு பெறும். உள்ளூராட்சிசபைத்  தேர்தல் வாக்கெடுப்புக்கான புதிய திகதி அறிவிப்புக்கு 21 நாள் காலவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றார்.
.
பாராளுமன்றத்தில் நேற்று (07) செவ்வாய்க்கிழமை  நிலையியற் கட்டளை   கீழ் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே   இவ்வாறு தெரிவித்த  பிரதமர் மேலும் கூறுகையில்,

தேசிய பாதுகாப்புச் சபை கூட்டம் கூடவில்லை என எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்ட விடயம் அடிப்படையற்றது. ஜனாதிபதி தலைமையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலையும்  தேசிய பாதுகாப்பு சபை கூடுகிறது.

திறைச்சேரியின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு செல்வதை தடுப்பதற்காகவே அவர் தேசிய பாதுகாப்பு சபைக்கு அழைக்கப்பட்டுள்ளார்  என எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிடுவதும் அடிப்பமையற்றது. தேசிய பாதுகாப்பு சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அதனை மறுக்க முடியாது என்றார்.

தேர்தல் ஆணைக்குழு விடுத்த அழைப்பு தொடர்பில் திறைச்சேரியின் செயலாளர் ஆணைக்குழுவுடன் பேசி ஒரு தீர்மானத்தை எடுப்பார் என்றார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிசபைகள் அமைச்சர் என்ற ரீதியில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் பலமுறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன்.

தேர்தல் திருத்தச்சட்டம்,தொடர்பில்  தேர்தல்கள் ஆணைக்குழு பல யோசனைகளை முன்வைத்துள்ளது.சுதந்திரமான முறையில் தேர்தலை நடத்தும் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் – என்றார்.

கட்டுப்பணம் ஏற்றல் பணியில் இருந்து மாவட்ட செயலாளர்களை விலகிக் கொள்ளுமாறு அறிவிக்கும் தீர்மானத்தை அமைச்சரவை எடுக்கவில்லை.தவறுதலாக வெளியிட்ட அறிக்கையை பொதுநிர்வாக அமைச்சர் மறுகணமே திருத்திக்கொண்டார்.தேர்தல் செயற்பாடுகளுக்கு தடையேற்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது என்றார்.

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் நிறைவு பெறும். உள்ளூராட்சிசபைத்  தேர்தல் வாக்கெடுப்புக்கான புதிய திகதி அறிவிப்புக்கு 21 நாள் காலவகாசம் வழங்கப்பட வேண்டும்.தேர்தல்தொடர்பில் ஆணைக்குழு ஒரு தீர்மானத்தை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்,தேர்தல்கள்  ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் தலையிட போவதில்லை என்றார்.

உள்ளூராட்சிசபைத் தேர்தல்,மக்களின் ஜனநாயக வாக்குரிமை தொடர்பில் தற்போது போர்கொடி தூக்குபவர்கள் மாகாண சபைத் தேர்தலை மறந்து விட்டார்கள்.கடந்த அரசாங்கம்  மாகாண சபை திருத்தச்சட்டத்தை உருவாக்கி மாகாண சபைத் தேர்தலை முழுமையாக இல்லாதொழித்துள்ளது.ஆகவே மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கு தற்போதைய எதிர்க்கட்சிகள் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள் என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...