முள்ளிவாய்க்காலை சேர்ந்த இளம் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சென்னை வேளச்சேரி பகுதியில் தங்கி வந்துள்ளபெண்ணே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சட்டவிரோதமான முறையில் கள்ளத்தோணியில் தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு தப்ப முயன்றுள்ளார். இந்த வேளையிலேயே குறித்த பெண் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார் .
முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்த சிவனேசன் கஸ்தூரி என்ற 18 வயது இளம் பெண்ணே தனுஷ்கோடிக்கு அடுத்துள்ள இரண்டாம் மணல் திட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார் என்று தகவல்கள் தெரிவித்தன.
இறுதிப் போரின் பின்னர் இலங்கையில் இருந்து கஸ்தூரி தமிழகம் வந்து அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்துள்ளார். அங்கு ஒருவருடன் காதல் வசப்பட்டுள்ளார். மீண்டும் இலங்கை திரும்பிய அவர், காதலனைச் சந்திப்பதற்காக 2018ஆம் ஆண்டு விமானம் மூலம் சென்னைக்குச் சென்றுள்ளார் என்று கூறப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்ட பெண் ராமேஸ்வரம் மெரைன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment