1675905003 sanakiyan 2
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரான்ஸ் தூதுவர் – கூட்டமைப்பு சந்திப்பு

Share

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (8) இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், இரா. சாணக்கியன் மற்றும் கலையரசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, சுதந்திர தினத்தினை முன்னிட்டு தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டம் என்பன தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் காலங்களில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் உதவிகளை எவ்வாறு தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு உதவும் வகையில் வழங்க முடியும் என்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில், இலங்கைக்கான பிரான்ஸின் துணை தூதுவரும் பங்கேற்றிருந்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...

Pillayan
இலங்கை

இன்றைய தினம் பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்...

Ranil Namal
இலங்கை

ரணிலுடன் நாமல் பேசியது என்ன?

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராஜபக்ச தரப்பினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. இந்த நடவடிக்கைகளுக்கு,...

Fire Breaks
இலங்கை

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ – துண்டிக்கப்பட்ட மின்சாரம்.

  களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை சுமார் 8.30...