1672283914 1672281652 Famers S
இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்கு இன்று முதல் 20,000

Share

பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களை கருத்திற்கொண்டு விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் இன்று (29) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த பெரும் போகத்தில் நெற்பயிர் செய்த 1.2 மில்லியன் விவசாயக் குடும்பங்களுக்கு பெரும் போகத்தில் பயிர் சேதங்களை கருத்தில் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 08 பில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டது.

குறித்த பணத்தை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கும் பணிகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 1 ஹெக்டேர் நெல் வயல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 10,000 ரூபாயும், அதிகமாக உள்ள விவசாயிகளுக்கு 20,000 ரூபாயும் வரவு வைக்கப்படவுள்ளது..

இதனிடையே, பயிர்செய்கைக்காக அரசாங்கம் வழங்கும் உரங்கள் தரமானதாக இல்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
கன்னியா வெந்நீரூற்று
இலங்கை

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கை.

ஆட்சிக்கு வரும்போது, நாட்டில் வாழும் அனைவரும் சமம் என கூறி ஆட்சியை பிடித்த அரசாங்கம் தற்போது...

சுரேஸ் பிரேமச்சந்திரன்
இலங்கை

குற்ற செயல்களில் தற்கால அரசுக்கும் பங்குண்டு – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மட்டக்களப்பு – வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற...

சுகீஸ்வர பண்டார
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளருக்கு விளக்கமறியல்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30...

காணாமல் ஆக்கப்பட்டோர்nnnn
இலங்கை

அவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை – தூதுக்குழுவினரின் வருகையினை தொடர்ந்து வந்துள்ள கருத்து.

இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர்...