electricity board 2 1
இலங்கைசெய்திகள்

புதிய மின் இணைப்பு – 35,000 பேர் காத்திருப்பு

Share

வாடிக்கையாளர்களுக்கு புதிய மின்சார இணைப்புகளை வழங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக புதிய இணைப்புகளை வழங்குவதற்கு தேவையான மின்சார மீற்றர்கள் உள்ளிட்ட பல உபகரணங்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

புதிய இணைப்புகளைப் பெறுவதற்காக தற்போது 35,000 பேர் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

எனினும் எதிர்வரும் 3 மாதங்களில் இவர்களுக்கு புதிய இணைப்புக்கள் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

தற்போது இலங்கை மின்சார சபைக்கு மாதாந்தம் 250 மின்மாற்றிகள் தேவைப்படுகின்றன. ஆனால் தற்போதைய டொலர் நெருக்கடியை கருத்தில் கொண்டு மாதாந்தம் சுமார் 100ஐ பெற்றுக்கொள்ள முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...