image e6e8727599
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மர்மமான முறையில் மாடுகள் இறப்பு! – வவுனியாவில் சம்பவம்

Share

வவுனியா, பூம்புகார் கிராமத்திலே உள்ள விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை மர்மமான முறையில் 10க்கு மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன.

குறித்த கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தினுள் அப்பிரதேசவாசிகளின் மாடுகள் சில உட்புகுந்து அங்குள்ள உழுந்து மற்றும் நெற் பயிர்களை மேய்ந்துள்ளதாகவும் இதனை கண்ணுற்ற விவயாய நில உரிமையாளர் ஆத்திரமடைந்து அம்மாடுகளிற்கு யூரியா மற்றும் பூச்சிகொள்ளி மருந்தையும் நீரில் கலந்து  குடிக்க வைத்துள்ளார்.

image 0c04e50e93

அதனை அம்மாடுகள் பருகி உயிரிழந்துள்ளதாக  அக்கிராம கமக்கார அமைப்பினர் மற்றும் மாட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இதனைவிட அந்நீரினை பருகிய ஏனைய மாடுகளும் தற்போது நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் மாட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம், தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை மாலை நேரில் சென்று பார்வையிட்டதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

image f1687e3ddb

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....