katunayake airport
இந்தியாஇலங்கைசெய்திகள்

சட்டவிரோத கடவுச்சீட்டுடன் யாழ் வர முற்பட்ட பெண்கள் கைது!

Share

யாழ்ப்பாணத்துக்கு வர முற்பட்ட இரு பெண்கள் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சென்னை முகவரிகள் கொண்ட, இந்திய கடவுச்சீட்டுடன் விமனநிலையத்துக்கு சென்ற நிலையில் நிலையில், ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்த போது இரண்டுமே போலியான கடவுச்சீட்டுக்கள் என்று தெரிய வந்தது.

இதையடுத்து, கங்கா சுந்தரதாசன் (46), சொர்ணகலா சுந்தரேசன் (22) என்ற பெண்களின் பயணங்களையும், குடியுரிமை அதிகாரிகள் ரத்து செய்தனர்.

பொலிஸ் விசாரணையில், இவர்கள் இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து, சுற்றுலா பயணிகள் விசாவில் சென்னைக்கு வந்து விட்டு, இங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டனர். அவர்கள், ஏஜெண்டுகளிடம் பணம் கொடுத்து போலியான இந்திய கடவுச்சீட்டுக்கள் பெற்றுள்ளனர். தற்போது, சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் செல்ல முயன்றனர் என்று தெரிய வந்தது.

பின்னர் சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், 2 பெண்களையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 18
செய்திகள்இலங்கை

சீரற்ற வானிலை: தடைப்பட்ட நீர் விநியோகம் இரண்டு நாட்களுக்குள் சீரமைக்கப்படும் – தேசிய நீர் வழங்கல் சபை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாகப் பல மாவட்டங்களில் தடைப்பட்டுள்ள நீர்...

images 17
செய்திகள்இலங்கை

வெள்ளத்தில் அகப்பட்டு நீர்கொழும்பில் இருவர் உயிரிழப்பு

நாட்டைத் தாக்கிய பாரிய பேரழிவின் காரணமாக நீர்கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்....

25 692d73f8ae775
செய்திகள்இலங்கை

முத்தயன்கட்டு வெள்ளத்தில் சிக்கிய ஏழு விவசாயிகளும் சிறுவனும் பத்திரமாக மீட்பு: கடற்றொழிலாளர்கள் குழு மனிதாபிமான உதவி!

முல்லைத்தீவு முத்தயன்கட்டு நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக விவசாய நிலங்களில்...

images 16
செய்திகள்இலங்கை

சாரதி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்கச் சலுகை: டிசம்பர் 25 வரை காலாவதியான உரிமங்களுடன் வாகனம் ஓட்டச் சட்டத் தடைகள் இல்லை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்த நிலைமைகள் காரணமாக, சாரதி அனுமதிப் பத்திரங்களைப்...