ezgif 4 c6507907f0
உலகம்செய்திகள்

எரிமலை வெடித்து சிதறியது – இந்தோனேசியாவில் 2 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

Share

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள லுமாஜாங் நகரில் அந்நாட்டின் மிகப்பெரிய எரிமலையான செமேரு உள்ளது. சுமார் 12 ஆயிரம் அடி உயரம் கொண்ட செ மேரு எரிமலை திடீரென்று வெடித்து சிதறியது.

கன மழை காரணமாக செமேரு எரிமலையின் குவி மாடம் சரிந்தது. இதனால் எரிமலையில் நெருப்பு குழும்பு வெளியேற தொடங்கியது. எரிமலையில் இருந்து சாம்பல் புகை மற்றும் நெருப்பு குழம்பு வெளியாகி வருகிறது.

5 ஆயிரம் அடி உயரத்துக்கு சாம்பல் புகை மேலே எழும்பியுள்ளது. அங்குள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் எரிமலை சாம்பல் பரவியுள்ளது. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சும்பர்வுலு, சுபிது ராங் கிராமங்களில் மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர்.

அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மேலே எரிமலை குப்பைகள் கிடந்தன. எரிமலை வெடிப்பு காரணமாக 2 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

அப்பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் மூடப்பட்டுள்ளன. எரிமலை குழம்பு பாயும் பாதையில் உள்ள பெகக் கோபோகன் ஆற்றின் தென்கிழக்கு பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கஜர்குனிங் என்ற கிராமத்தில் பாலம் ஒன்று சேதமடைந்துள்ளது. எரிமலை வெடிப்பால் சாம்பல் புகை மற்றும் நெருப்பு குழம்பு வெளியேற்றத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இன்றும் எரிமலையின் ஆக்ரோஷம் அதிகரித்து இருக்கிறது.

நேற்றை விட இன்று சாம்பல் புகை வெளியேறும் அளவு உயர்ந்து உள்ளது. இதனால் மேலும் பல இடங்களுக்கு சாம்பல் புகை பரவும் அபாயம் உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செமேரு எரிமலை வெடித்து சிதறியதில் 51 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...