doctor
இலங்கைசெய்திகள்

வைத்தியர்கள் ஒய்வு தொடர்பில் பரிசீலனை

Share

ஓய்வுபெறும் வயதை 60 ஆகக் குறைப்பதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்து ரீட் கட்டளை ஒன்றை பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலித்துள்ளது.

176 விஷேட வைத்தியர்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை பரிசீலித்த சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு அடுத்த மாதம் 13 ஆம் திகதி பிரதிவாதிகளுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்துள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

60 வயதில் விஷேட வைத்தியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்க வேண்டும் என கடந்த ஒக்டோபர் 17 ஆம் திகதி கூடிய அமைச்சரவையில் தீர்மானித்துள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...