LITRO
இலங்கைசெய்திகள்

எரிவாயுக்கு மீண்டும் தட்டுப்பாடு!

Share

நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கும் நிலையில் சிறு விற்பனையாளர்களுக்கு கடன் அடிப்படையில் சிலிண்டர்களை வழங்குமாறு லிட்ரோ நிறுவனம் விநியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

எரிவாயு விற்பனையாளர்களிடம் போதிய அளவான சிலிண்டர்கள் கைவசம் இல்லை என்று தெரியவந்துள்ளது.

பெரும்பாலான விநியோகஸ்தர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனையாளர்களுக்கு கடனுக்கு வழங்குவதில்லை என்றும் பணம் கொடுத்தால் மாத்திரமே சிலிண்டர்களை வழங்குவதாகவும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிறு விற்பனையாளர்கள் பலர் எரிவாயுவை கொள்வனவு செய்வதில் சிரமப்படும் காரணத்தினால் அவர்களுக்கு கடன் வசதியில் எரிவாயுவை வழங்குமாறு விநியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.

இதன் மூலம் எரிவாயு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...