பொலன்னறுவை கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் தப்பிச் சென்ற மற்றும் அதனுடன் தொடர்புடைய 201 கைதிகளுக்கு 17ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களை பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மோதல் சம்பவத்தில் பலர் தப்பிச் சென்ற நிலையில், பொலிஸாரின் தேடுதலில் சிலர் மீண்டும் கைது செய்யப்பட்டதுடன், பலர் பொலிஸில் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment