namal
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணில் முன்பு போல இல்லை! – கூறுகிறார் நாமல்

Share

‘பொடி மைனா’ என்று தன்னை அழைப்பதற்கு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொண்டு வந்த இணையத்தைப் பயன்படுத்தி அவரே தாக்கப்படுகிறார் என்று தெரிவித்தார்.

இணையத்தில் மக்கள், மஹிந்த ராஜபக்ஷவை ‘நாக்கி மைனா’ என்றும் தன்னை ‘பொடி மைனா’ என்றும் விமர்சிப்பதாக குறிப்பிட்ட நாமல் எம்.பி, தன்னை மஹிந்த ராஜபக்ஷவின் மகனாக மக்கள் ஏற்றுக்கொண்டமையால் தான் மகிழ்ச்சி அடைவதாக சுட்டிக்காட்டினார்.

2005ஆம் ஆண்டு 5 சதவீதம் பேருக்கு மட்டுமே இணையம் இருந்ததாகவும் மஹிந்த அறிமுகப்படுத்திய இணையத்தை இன்று மக்கள் பயன்படுத்தி அவரை ‘நாக்கி மைனா’ என்று அழைக்கின்றனர் என்றார்.

ரணில் விக்கிரமசிங்க புனர்வாழ்வளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியினர் குழப்பமடைந்தாக குறிப்பிட்ட நாமல் எம்.பி, அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மை என குறிப்பிட்டார்.

ரணில் விக்கிரமசிங்க முன்பு போல் இப்போது மேற்குலகுக்கு விசுவாசமாக இல்லை என்றும் அவர் தூதரகங்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படவில்லை என்றும் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ, மனித உரிமைகளை மதித்த போதிலும், ரணில் விக்கிரமசிங்க காலி முகத்திடலை துடைத்தெறிந்தாகவும் அவர் மனித உரிமைகள் பற்றி இப்போது பேசவில்லை என்றும் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....