image 6483441 4 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

துணைவேந்தர் வெற்றிக் கிண்ண அறிமுக நிகழ்வு

Share

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பணியாளர்களிடையே புரிந்துணர்வையும், நட்புறவையும் நிலைபெறச் செய்யும் நோக்க்குடன் நடாத்தப்படவுள்ள யூனிவேர்சிற்றி கிரிக்கெட் லீக் – துணைவேந்தர் வெற்றிக் கிண்ண அறிமுக நிகழ்வு புதன்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு யாழ். பல்கலைக் கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சுற்றுப் போட்டியில் பங்குபற்றும் அணிகளின் உரிமையாளர்கள், முகாமையாளர்கள், அணித் தலைவர்கள், வீரர்களின் முன்னிலையில் பல்கலைக்கழகப் பதிவாளர், நிதியாளர் மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் கூடியிருக்க துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா வெற்றிக் கிண்ணத்தைத் அறிமுகம் செய்தார்.

இந்தச் சுற்றுப் போட்டியில் 6 அணிகள் பங்குபற்றவுள்ளன. போட்டியின் அறிமுக ஆட்டத்துடன் முதற்சுற்று போட்டிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக ஆடுகளத்தில் ஆரம்பமாகவுள்ளன. சுற்றுப் போட்டியின் இறுதியாட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி, சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...