சதொசவில் குடும்பத்துக்கு ஒரு கிலோ சீனி – வரிசையில் காத்திருக்கும் மக்கள்
சதொசவில் விற்பனை செய்யப்படும் சீனியைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் சீனிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மக்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர்.
சதொசவில் சீனியின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் லசந்த அழகியவன்ன வெளியிட்ட தகவலைத் தொடர்ந்து இதுவரையில் 120 ரூபாக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சிவப்பு சீனி, தற்போது 130 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இந்நிலையில் சதொச விற்பனை நிலையங்களில் ஒரு குடும்பத்துக்கு ஒரு கிலோ சீனி மாத்திரம் விற்பனை செய்யப்படுகிறது என தகவல்கள் வெளிவந்துள்ளன.
மக்கள் அதனை பெற்றுக்கொள்வதற்கு சதொச நிறுவனங்களுக்க முன்னால் நீண்ட வரிசையில் நிற்பதாகவும் சில சதொச நிறுவனங்களில் சீனி நிறைவடைந்தமையால் மக்கள் கொள்வனவுசெய்ய முடியாது வீடு திரும்ப நேரிட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Leave a comment