1526823888
இலங்கைசெய்திகள்

நீர் மட்ட உயர்வு! – நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு

Share

மத்திய மலைநாட்டின் மேற்குப் பகுதிகளில் இடையிடையே பெய்து வரும் கடும் மழை காரணமாக லக்ஷபான மற்றும் கனியன் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று அதிகாலை முதல் திறக்கப்பட்டுள்ளது.

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகளும், கனியன் நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவும் தலா மூன்று அகழிகளுடன் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் மழையினால் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையில் உள்ளதோடு, அந்தமட்டம் அதிகரித்துள்ளதையடுத்து, கனியன், லக்ஷபான, நியூ லக்ஷபான, பொல்பிட்டிய மற்றும் விமலசுரேந்திர ஆகிய நீர்மின் நிலையங்களில் அதிகபட்ட மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் ஒரு மணிநேர மின்வெட்டு காலம் அறிவிக்கப்பட்டாலும் மின்வெட்டு இன்றி 24 மணி நேர மின்விநியோகம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...