vijaya
அரசியல்இலங்கைசெய்திகள்

காணாமல்போனோருக்கு விரைவில் சான்றிதழ்!!

Share

காணாமல்போனோர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தவும் காணாமற்போனதற்கான சான்றிதழ்களை வழங்கவும் அதிகாரிகளுக்கு நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச பணிப்புரை வழங்கினார்.

அத்தோடு மோதல்களினால் இழந்த உயிர்கள் மற்றும் சேதமடைந்த சொத்து

இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாத்தல், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் தொடர்பான ​தேசிய பொறிமுறையின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதியின் சட்டத்தரணி கலாநிதி விஜேயதாச ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது.

நீதி அமைச்சில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது, வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் கலந்துகொண்டார்.

மனித உரிமைகளைப் பாதுகாத்தல், அமைதியைக் கட்டியெழுப்புதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்தல், காணாமற்போனதாக உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களுக்கு நட்டஈடு வழங்குதல், பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள தனியார் காணிகளை விடுவித்தல், அத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் முன்னேற்றம் தொடர்பாகவும் இக்கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

வருடாவருடம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் பங்குபற்றும்போது, ​​இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் போன்று எதிர்காலத்தில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நிறுவப்படும் நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

நாடுகளுக்கிடையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் வகையில் செயற்படுவது அதற்காக நிறுவப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பாகுமெனவும், தேசிய, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தினால் நாடு முழுவதையும் உள்ளடக்கியதாக எதிர்காலத்தில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள ‘கிராம ராஜயம்’ கருத்தாக்கம் உடனடியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டுமெனவும் நீதி அமைச்சர் வலியுறுத்தினார்.க்களுக்கு இழப்பீடு வழங்கவும் அதனை முறையாகவும் விரைவாகவும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...