B77URTLIIAEg65G
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சாவகச்சேரி நீதிமன்றில் இருந்து சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!

Share

சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் இருந்து இரு சந்தேக நபர்கள் தப்பி ஓடிய நிலையில் ஒருவர் மீள கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றையவர் தலைமறைவாகியுள்ளார்.

போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் நேற்றைய தினம் புதன்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை, மன்று இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் சிறைக்காவலர்களின் பாதுகாப்பில் இருந்து இருவரும் தப்பியோடியுள்ளனர்.

தப்பியோடியவர்களை சிறைக்காவலர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து துரத்திய போது ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மற்றையவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

தப்பி சென்றவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....