sumanthiran 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜெனிவாவில் கடும் நெருக்கடி இலங்கைக்கு!

Share

” பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்ற உத்தரவாதத்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கியே ஜி.எல்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கை பெற்றுக்கொண்டது. அந்த உறுதிமொழி மீறப்பட்டுள்ளதால் ஜெனிவா தொடரில் கடும் நெருக்கடிகளை இலங்கை சந்திக்க நேரிடும். ”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் இன்று (26) தெரிவித்தார்.

“நல்லாட்சியில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, பிரசல்ஸ் சென்று ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தியிருந்தார். இதன்போது பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்ற உத்தரவாதமும் அது நீக்கப்படும்வரை சட்டம் 0பயன்படுத்தப்படமாட்டாது என்ற உறுதிமொழியும் வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்தே ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்கப்பெற்றது.” எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

” எனினும் உறுதிமொழி தற்போது மீறப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. இதன் தாக்கம் ஜெனிவா தொடரில் எதிரொலிக்கும். போராட்டக்காரர்கள் வன்முறைகளில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நாட்டில் உள்ள சாதாரண சட்டம் போதுமானது. வன்முறை என்பது தவறுதான். ஆனால் எல்லா வன்முறைகளும் பயங்கரவாத நடவடிக்கையாக அமையாது குறிப்பாக தேர்தல் காலங்களில் அரசியல் வாதிகளின் அலுவலகங்கள் தாக்கப்படும் அது பயங்கரவாத நடவடிக்கையா?” எனவும் சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.

போராட்டக்களத்தில் இருந்த முன்கள போராளிகள் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி வேட்டையாடப்படுகின்றனர். இது தவறான அணுகுமுறையாகும். அவசரகால சட்டத்தை மாதாந்தம் நாடாளுமன்றத்தின் அனுமதியுடன்தான் நீடிக்க வேண்டும். சிலவேளை 20நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதி வழங்காமல் இருக்கலாம் என்பதற்காகவும் வழங்கிய வாக்குறுதியை மறந்து பயங்கரவாத தடைச்சட்டத்தை கையில் எடுத்துள்ளது அரசு. என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

துபாயில் பாதுகாப்பு நடவடிக்கை: சிதறி விழுந்த பாகங்களால் இலங்கையர் உட்பட நால்வர் காயம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு வெற்றிகரமான பாதுகாப்பு இடைமறிப்பு நடவடிக்கையின்போது (Interception),...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து: நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன!

காலி (Galle) ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பயன்பாட்டில் இல்லாத இரண்டு ரயில் பெட்டிகள்...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை சுற்றுலாவை மேம்படுத்த அதிரடி நடவடிக்கை: 39 நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை அனுமதி!

நாட்டின் சுற்றுலாத் துறையை சர்வதேச மட்டத்தில் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடுகளைச் சேர்ந்த...

Untitled 1
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் 16 வயது சிறுமி கத்தியால் குத்திக்கொலை: மூன்று இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் லீட்ஸ் (Leeds) நகரில் 16 வயது சிறுமி குளோயி வாட்சன் டிரான்ஸ்ஃபீல்ட் (Chloe Watson...