Gotabaya Rajapaksa
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாபயவுக்கு முழு சுதந்திரம் உண்டு!

Share

” முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கை வருவதற்கான முழு சுதந்திரம், உரிமை உள்ளது. அந்தவகையில் அவர் விரைவில் நாடு திரும்புவார்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. தனது நாட்டுக்கு வரும் உரிமை கோட்டாபய ராஜபக்சவுக்கு இருக்கின்றது.

அதேவேளை, போராட்டம் என்ற போர்வையில் இடம் பெற்ற சில வன்முறைச்சம்பவங்களை அனுமதிக்க முடியாது. அத்தகையவர்களுக்கு எதிராக நடவடிக்கை அவசியம்.

அதேபோல ஊழல்கள் மற்றும் தவறான செயற்பாடுகளில் ஈடுபடும் அரசியல் வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் பெயர்களை ஊடகங்கள் பகிரங்கமாக வெளியிட வேண்டும். அவ்வாறு அல்லாமல் அரசியல்வாதி, அரச அதிகாரி என பொதுவாக விளித்தால் அது அனைவருக்கும் களங்கமாக அமையும்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...