அரசியல்
நாட்டின் தேசிய விலங்குக்கு காகம் பொருத்தம்! – மஹிந்தவுக்கு டிலான் பதிலடி
நாடு நெருக்கடியில் இருக்கும்போது மக்களின் கோரிக்கை நாட்டின் தேசிய விலங்கை மாற்றுவது அல்ல, எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
அத்துடன் சிஸ்டத்தை மாற்றுகிறோம் என ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்கள் தேசிய விலங்கை மாற்றுவது பற்றி முன்னுரிமை கொடுக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் முக்கியமான பிரச்சினைகள் பல இருக்கின்றன. எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வையே மக்கள் கோருகின்றனர். தேசிய விலங்கை மாற்ற வேண்டும் என்பதல்ல, மகிந்த அமரவீரவுக்கு மர அணிலை தேசிய விலங்காக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் இந்த நாட்களில் காகம் அதற்கு பொருத்தமாக இருக்கும் .
ஏனெனில் இன்று இந்த நாட்டின் ஆட்சியை நடத்துவதில் காகம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
மக்களின் முக்கிய பிரச்சினை தேசிய விலங்கை மாற்றுவது அல்ல. மக்கள் கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பியது அவர்கள் எதிர்பார்த்த ஆட்சியை வழங்காததாலேயே ஆகும் .
ஊழலற்ற அனாவசிய அரச செலவினங்களை கட்டுப்படுத்தும் ஜனநாயக ரீதியான ஆட்சியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இன்று என்ன நடக்கிறது அதை விட மோசமான நிலையை நோக்கி நாடு நகர்கிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login