image c763c9aec6
இந்தியாஇலங்கைசெய்திகள்

நாட்டை வந்தடைந்தது டோனியர்-228

Share
இலங்கை இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளும் இரண்டு டோர்னியர்-228 ( Dornier 228 ) கடல்சார் உளவு விமானங்களில் முதலாவது விமானம் இன்று (15) முற்பகல் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் தரையிறங்கியது.
தரையிறங்கிய விமானத்திற்கு விமான நிலையத்தில் நீர் விசிறி வரவேற்பளிக்கப்பட்டது. அத்துடன் விமானத்தை இலங்கை விமான படைக்கு கையளிக்க இந்திய கடற்படையின் உப தளதிபதி வைஸ் எட்மிரல் சதீஸ் என் கோர்மடே இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
2022 ஏப்ரலில் இந்தியாவிற்கு விமானப் பயிற்சிக்காக 15 பேர் கொண்ட குழுவினரை இலங்கை விமானப்படை அனுப்பியது, அவர்கள் பயிற்சியை முடித்து, விமானத்தை பறக்கவும் பராமரிக்கவும் தகுதி பெற்றுள்ளனர். இந்திய பொறியாளர்களின் மேற்பார்வையின் கீழ் பயிற்சி பெற்ற 15 இலங்கை விமானப்படை தரைக் குழுவினரால் விமானம் பராமரிக்கப்பட உள்ளது.
புதிய விமானத்தை இந்தியா தயாரிக்க இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்பதால் இந்த விமானம் இலவசமாக வழங்கப்படும் இலங்கைக்காக இந்தியாவில் தயாரிக்கப்படும் விமானம் தயாராகும் வரை இரண்டு ஆண்டுகளுக்கு இடைக்காலமாக இந்த விமானம் பயன்பாட்டிலிருக்கும்.
டோனியர் இலகு ரக உளவு விமானமானது குறுந்தூரத்தில் விண்ணுக்கு செலுத்தக்கூடிய மற்றும் தரையிறக்கக்கூடிய வசதி வாய்ப்புக்களை கொண்டுள்ளதோடு, இலத்திரணியல் யுத்த நடவடிக்கைகள் கடற்கண்காணிப்பு அனர்த்த நிலைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளின் போது பயன்படுத்தக்கூடியது.

image cc480dd5f1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 15
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: சீனாவிற்கான தனது விஜயத்தைத் தள்ளிவைக்க டொனால்ட் ட்ரம்ப் சமிஞை

ஈரான் போர் காரணமாக மூடியுள்ள ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு சீனா ஒத்துழைப்பு வழங்க வேண்டும்...

11 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு: வாகன உரிமையாளர்கள் கடும் அவதி!

ஹட்டன் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலநிலை மீண்டும்...

10 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை வாகன சந்தை: பிப்ரவரி மாதத்தில் பதிவுகளில் சிறு சரிவு – JB Securities அறிக்கை

இலங்கையில் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனவரி மாதத்தில் காணப்பட்ட எழுச்சியுடன் ஒப்பிடுகையில், பிப்ரவரி...

09 15
செய்திகள்உலகம்

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் தாக்குதல்: விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள எரிபொருள் தாங்கி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் பெரும்...