சீனாவின் செயற்கைக்கோள் ஆய்வுக் கப்பல் “யுவான் வாங்-5” கப்பல் இலங்கைக்கு வருவதாக இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என துறைமுக அதிகார சபையின் துறைமுக மாஸ்டர் நிர்மல் சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பல் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், மேலதிக ஆலோசனைகள் தேவைப்படுவதால், பயணத்தை ஒத்திவைக்குமாறு சீனத் தூதரகத்திற்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்திக்கப்பட்டிருந்தது.
பொதுவாக ஒரு கப்பல் துறைமுகத்திற்கு வருவதாயின் துறைமுக மாஸ்டரிடம் அனுமதி பெற வேண்டும் இவ்வாறான நிலையில், கப்பல் வருவதற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என துறைமுக மாஸ்டர் நிர்மல் சில்வா தெரிவித்தார். கப்பலின் பயணத் திசை மாற்றப்பட்டிருக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
#SriLankaNews
Leave a comment