புதிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த தூதுவர், அவருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.
குறித்த சந்திப்பில், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவும் உறவுகளை வலுவான அணுகுமுறையின் மூலம் முன்னெடுத்துச் செல்வது குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும், புதிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment