VideoCapture 20220723 193405
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். கோண்டாவில் சாலையில் குழப்ப நிலை!

Share

யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு இன்று காலை முதல் இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலையில் எரிபொருள் வழங்கப்படாமையினால் குழப்ப நிலை ஏற்பட்டது.

யாழ் மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டோவில் டிப்போவில் டீசல் எரிபொருள்கிரமமாக வழங்கப்பட்டு வரும் நிலையில் நேற்று(22) இரவு 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பெறப்பட்ட 57 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் காப்பாளர் இருவரும் கல்கமுவ சாலை இ.போ.ச சாலை ஊழியர்களினால் தலாதகம எனும் பகுதியில் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலை நடாத்திய ஊழியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக்கோரி இ போ ச.ஊழியர்கள் இன்று காலை முதல் தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் வழங்கலை நிறுத்தியதால் குழப்ப நிலை ஏற்பட்டது.

யாழ் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் கெங்காதரன் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருடன் தொடர்பினை ஏற்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாட்டிற்காக தனியார் சேவையினருக்கு எரிபொருள் வழங்க முடியாது எனக்கு கூறுவதில் எந்தவித நியாயமும் இல்லை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டிற்காக தனியார் பேருந்தினர் பாதிக்கப்படக்கூடாது எரிபொருள் வழங்கப்படாமைக்கு உரிய காரணம் மற்றும் தங்கு தடை இன்றி எரிபொருளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபையின் முகாமையாளருடன் கலந்துரையாடி தீர்வினை பெற்று தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார்

இன்று மாலை வரை தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கப்படாமையினால் பேருந்து உரிமையாளர்கள் தமது பேருந்து வண்டிகளை கோண்டாவில் சாலையில் இருந்து எடுத்துச் சென்றுள்ளதோடு நாளை அரசாங்க அதிபருடன் சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளதாவும் தமக்கு தொடர்ச்சியாக இலங்கையை போக்குவரத்து சபையின் கோண்டாவின் சாலையில் எரிபொருள் பெறுவதில் கடும் சிரமங்கள் எதிர்நோக்குவதாகவும் பிறிதொரு இடத்தில் எரிபொருளை பெறுவதற்குரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு கோரிக்கை விடுக்கவுள்ளனர்.

எனவே நாளை அரசாங்க அதிபருடன் இடம்பெறும் சந்திப்பின் பின்னரே தனியார் பேருந்து சேவை பணிபுறக்கணிப்பா அல்லது சேவையை தொடர்ந்துஈடுபடுதா என தீர்மானிக்கப்படும் என யாழ் மாவட்ட தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத் தலைவர் கங்காதரன் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...