Gotabaya Rajapaksa
அரசியல்இலங்கைசெய்திகள்

சிங்கப்பூர் சென்றடைந்த பின்பே பதவி விலகல்!!

Share

மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணத்தை ஆரம்பித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அங்கு சென்றடைந்த பின்னர், ஜனாதிபதியின் பிரதிநிதியால் பதவி விலகல் கடிதம், சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என தெரியவருகின்றது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்கூட்டியே செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் குறித்த அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்ட பின்னர், ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கக்கூடும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான முன்னேற்பாடாகவே கொழும்பு மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதென அந்த வரட்டாரங்கள் தெரிவித்தனர். எனினும், இது தொடர்பில் உத்தியோகப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

அதேவேளை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவால் நாளை விசேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதம அமைச்சர், சர்வக்கட்சி அரசு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடி முடிவெடுக்கப்படவுள்ளது.

இதற்கிடையில் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகும்வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...