யாழில் ஐவர் இன்று கொவிட் தொற்றால் மரணம்!!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் ஐந்து பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சங்கானையைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வரணியைச் சேர்ந்த 98 வயது பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்துள்ளார். அவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தெல்லிப்பழையை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த கட்டுவனைச் சேர்ந்த 81 வயதுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவருக்குத் தொற்று இருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 100 வயது ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அல்வாய் மேற்கு, திக்கத்தைச் சேர்ந்த 47 வயதுப் பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில், அன்டிஜென் பரிசோதனையில் அவருக்குத் தொற்றிருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்புக்களுடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248 ஆக உயர்ந்துள்ளது.
Leave a comment