இலங்கை
வடமராட்சி கிராம அலுவலர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்!
யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராம சேவையாளர்கள் தமக்கு எரிபொருள் வழங்குகுமாறு கோரி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
சுகயீன விடுப்பு போராட்டத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஈடுபட்ட போதிலும் தமக்கான தீர்வு கிடைக்க பெறாததால் தாம் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், தமக்கான தீர்வு கிடைக்கும் வரை பணியை தொடர மாட்டோம் என கிராம சேவையாளர்கள் தெரிவித்தனர்.
குறித்த கவனயீர்ர்ப்பு போராட்டத்தில், கிராம சேவகர்கள் அத்தியாவசிய அலுவலர்களா? அல்லது அநாவசிய அலுவலர்களா? எரிபொருள் விநியோகத்தில் கிராம அலுவலர்களை புறக்கணிக்காதீர்கள், கொவிட் காலத்தில் அத்தியாவசிய அலுவலர்கள் பொருளாதார நெருக்கடி காலத்தில் ???
என பதாதைகள் ஏந்தி இருந்தனர்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login