21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

Share

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின் விசாரணையில் செல்வாக்கு செலுத்த பிரதி அமைச்சர் ஒருவர் முயன்றதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல குற்றம் சுமத்தியுள்ளார்.

தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்க இந்த பிரதி அமைச்சர் கிராண்ட்பாஸ் பொலிஸாரை தொடர்பு கொண்டார் என்பது தமக்கு தெரியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், ஜனநாயக விதிமுறைகளை அரசாங்கம் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் இந்த நிர்வாகத்தால் ஜனநாயகம் ஓரங்கட்டப்பட்டதாகவே தெரிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் கொழும்பு மாநகர சபையில், எதிர்க்கட்சிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த ஆறு உறுப்பினர்கள் மீது தேசிய மக்கள் சக்தி அழுத்தம் கொடுத்ததாகவும், இதனால் அவர்கள் கடைசி நிமிடத்தில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாக்குதல் குறித்து பேசிய உலுவிடகே மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தலதா குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
palansena
இலங்கை

பல்லன்சேன சிறைச்சாலையில் தொடரும் போராட்டம் – அதிகரிக்கப்பட்டது பாதுகாப்பு!

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளமையினால் அங்கு தொடர்ந்தும் பதற்றம்...

parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...