20220525 135403 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் குடும்ப அட்டைக்கு எரிபொருள் விநியோகம்!

Share

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு எரிபொருள் பற்றாக்குறை உருவாகியுள்ளது. கடந்தவாரம் வரை தேவையான எரிபொருளை பெற முடிந்தது. ஆனால் தற்போது உரிய நேரத்தில் எரிபொருள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு பங்கீட்டு அட்டையின் அடிப்படையில் ஜீலை மாதம் தொடக்கம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பொதுமக்கள் தங்கள் பிரதேச செயலர் பிரிவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக எரிபொருளை கொள்வனவு செய்துகொள்ள முடியும்.

கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பொதுமக்களுக்கும், திணைக்கள தலைவர்கள் மற்றும் பிரதேச செயலர் ஊடாக அரச ஊழியர்களுக்கும் பங்கீட்டு அட்டையின் அடிப்படையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியும்.

பொதுமக்கள் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியும். ஜீவனோபாய தொழிலாளர்கள், அத்தியாவசிய மற்றும் அரச ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

மேலும் சகலருக்கும் தேவையின் அடிப்படையில் அளவு கணக்கிடப்பட்டே எரிபொருள் விநியோகம் நடைபெறும். எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...