Jonshan fernando
அரசியல்இலங்கைசெய்திகள்

சரணடைந்த ஜோன்ஸ்டன் பிணையில் விடுவிப்பு!

Share

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய, காலிமுகத்திடல் தாக்குதல் சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எம்.பி. இன்று மாலை கோட்டை நீதிவான் திலின கமகேவின் இல்லத்துக்குச் சென்று சரணடைந்தார். இதன்போது, அவரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு உத்தரவிட்ட நீதிவான், வௌிநாட்டுப் பயணத் தடையையும் விதித்தார்.

குற்றப் புலனாய்வு திணைக்களம் அறிவிக்கும் திகதியில் வாக்குமூலமளிக்க வருகை தர வேண்டும் எனவும் நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்றிரவு 8 மணிக்கு முன்னதாக நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று பகல் உத்தரவிட்டிருந்தது.

அவரைக் கைதுசெய்வதற்காக கோட்டை நீதிவான் பிறப்பித்த பிடியாணையை அவர் சரணடையும் வரை நடைமுறைப்படுத்த வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு இன்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை  வழங்கும் வரை நீதிமன்றத்தில் ஆஜராகும் அவருக்கு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம் எனக் கோட்டை நீதிவானுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...