பிரசன்ன ரணதுங்க
அரசியல்இலங்கைசெய்திகள்

அமைச்சர் பிரசன்னவுக்குக் கடூழியச் சிறைத்தண்டனை!

Share

வர்த்தகர் ஒருவரிடமிருந்து 6 கோடி 40 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற குற்றச்சாட்டில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.

வர்த்தகர் ஒருவரிடமிருந்து 6 கோடி 40 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற சம்பவம் தொடர்பில் உறுதிமொழிப் பத்திரத்தில் கையொப்பமிட்டமை தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், மனுதாரருக்கு 2 கோடி 50 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மற்றைய அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் பிரதிவாதி விடுவிக்கப்பட்ட்டுள்ளார்.

அதேவேளை, ஏனைய பிரதிவாதிகளை அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...

Gotabaya Rajapaksa 2
இலங்கை

சற்றுமுன்னர் நீதிமன்றில் முன்னிலையானார் கோட்டாபய ராஜபக்ச.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ...

Deshabandhu Tennakoon
இலங்கை

அரகலய வழக்கு தேசபந்து தென்னகோனுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

கடந்த 2022 ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது, அனுருத்த பண்டார என்ற இளம் சமூக...

mahavali
இலங்கை

மகாவலியில் மாயமான 15 வயதுச் சிறுவன் – தேடுதல் பணிகள் தீவிரம்.

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆற்றில் மூன்று சிறுவர்கள் இணைந்து...