இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நடேசனின் 18வது நினைவேந்தலும் நூல் வெளியீடும்!!

Share

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நாட்டுப்பற்றாளர் ஜயாத்துரை நடேசனின் 18வது நினைவேந்தலும் நூல் வெளியீடும் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.நாவலர் கலாச்சார மண்டபம், பி.ப 3.30 மணிக்கு யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன்,தலைமையில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

நடேசன் தொடர்பில் அவருடன் ஊடகப்பணியாற்றிய சக ஊடகவியலாளர்கள்,செயற்பாட்டாளர்களென பலரது நினைவுகூரலுடன் வெளிவந்துள்ள நூல் அறிமுகமும் வெளியீடும் நடைபெறவுள்ளது.

அதேவேளை “நடேசனின் ஊடகத்துறை பயணம்” தொடர்பிலான நினைவுரைகளுடன் ஞாபகார்த்த நினைவுப்பேரூரையினை யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கோசலை மதன் ஆற்றவுள்ளார்.

‘அரசியல் மற்றும் இதர நெருக்கடிகளை அரசியலமைப்பு தீர்வுகள் மூலமாக முகாமை செய்தல்’ – இலங்கையில் அதற்கான சாத்தியங்களும் சவால்களும் எனும் தலைப்பில் அவரது உரை முன்னெடுக்கபடவுள்ளது.

நிகழ்வின் இறுதியாக ஊடகவியலாளர்களது தயாரிப்பில் உருவாக்கப்பட்ட ஆவணப்பட காட்சிப்படுத்தல் இடம்பெறவுள்ளது.

சமநாளில் கிழக்கில் மட்டக்களப்பிலும் வடக்கில் யாழ்ப்பாணத்திலும் நாட்டுப்பற்றாளர் ஜயாத்துரை நடேசன் 18வது நினைவேந்தலும் நூல் வெளியீடும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமராட்சி கரவெட்டியில் பிறந்த மூத்த ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசன் 2005ம் ஆண்டின் மே 31ம் திகதி மட்டக்களப்பில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
arested 2
இலங்கை

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

நேற்றைய தினம், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம்...

QR முறைமை
இலங்கை

QR முறைமை நீக்கப்படுமா?

எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையும், வரம்புகளும் நீக்கப்பட வேண்டுமென பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளதுடன், இலங்கை...

bus bike accident 1
இலங்கை

தாயையும் மகனையும் காவுகொண்ட கோரவிபத்து!

பகமூண, தமன பகுதியில், பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர்...

கடூழிய சிறைத்தண்டனை
இலங்கை

சிறுமி துஸ்பிரயோகம் – சந்தேக நபருக்கு வவுனியா நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.

கடந்த 2015, 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்ட தந்தையின்...