கோட்டாபய 2 1000x600 1
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாவுக்கு எதிரான பிரேரணை: விவாத முயற்சி தோற்கடிப்பு!

Share

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளை இடைநிறுத்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சி ஆளுங்கட்சியால் தோற்கடிக்கப்பட்டது.

ஜனாதிபதிக்கு அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணையை இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்குக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு ஆளுங்கட்சி எதிர்ப்பை வெளியிட்டது.

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை விவாதத்துக்கு எடுப்பதற்காக, நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளை இடைநிறுத்தும் யோசனையை எதிரணியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. எம்.ஏ. சுமந்திரன் முன்வைத்தார். அதனை ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. லக்‌ஷ்மன் கிரியெல்ல வழிமொழிந்தார்.

இந்த யோசனைக்கு ஆளுங்கட்சி உடன்படவில்லை. நிலையியல் கட்டளைகளை இடைநிறுத்துவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தினார். இதையடுத்து சுமந்திரனின் யோசனை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது நிலையியல் கட்டளையை இடைநிறுத்த ஆதரவாக 68 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

வாக்கெடுப்பில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றதால் ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை விவாதத்துக்கு வரவில்லை.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...