IMG 20220514 WA0009
இலங்கைசெய்திகள்

தமிழர்கள் போராட்டம் தொடர்பில் தற்போதய போராட்டக்காரர்கள் சிந்திக்க வேண்டும்!! – லீலாதேவி தெரிவிப்பு

Share

தமிழர்கள் கடந்த காலங்களில் ஏன் அடக்கப்பட்டார்கள், வன்முறை ஏன் உருவாக்கப்பட்டது என்பது தொடர்பில் தற்போது போராடுபவர்கள் சிந்திக்க வேண்டும் – என வடகிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் ஆ.லீலாதேவி தெரிவித்தார்.

சமகாலநிலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் எந்த அரசாங்கம் வந்தாலும் எதுவுமே மாறப்போவது கிடையாது. வடக்கிற்கு ஒரு நீதியும் தெற்கிற்கு ஒரு நீதியும் காணப்படுகின்றது. ஆனந்த சுதாகரன் மற்றும் சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கு நடந்த விடயங்களில் இருந்து இதனை உணர்ந்துகொள்ள முடியும்.தற்போது தெற்கில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வடக்கு மக்கள் அனுபவித்த துன்ப துயரங்களை தென்னிலங்கை மக்களும் தற்போது உணர ஆரம்பித்துள்ளனர்.

தென்னிலங்கையில் கோட்டா கோ கம, மைனா கோ கம என போராட்டத்தில் ஈடுபவர்கள் வலிந்து
காணாமலாக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கு உதவ வேண்டும். எமது உறவுகள் கையளிக்கப்பட்ட பின்னரே காணாமலாக்கப்பட்டவர்கள் என்பதை தென்னிலங்கை போராட்டக்காரர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.மறைமுகமான இடங்களில் வைக்கப்பட்டுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை மீட்டுத்தர உதவி செய்ய வேண்டும்.

தமிழர்கள் கடந்த காலங்களில் ஏன் அடக்கப்பட்டார்கள், வன்முறை ஏன் உருவாக்கப்பட்டது என்பது தொடர்பில் தற்போது போராடுபவர்கள் சிந்திக்க வேண்டும். எதிர்காலத்தில் மீண்டும் வன்முறை ஏற்படாத வகையில் ஒரு சுய நிர்ணய உரிமையை உருவாக்குவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...