Corona மரணங்கள் – முதல் தடவை 200 கடந்தது!
நாட்டில் கொரோனாத் தொற்றால் மேலும் 209 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய நாட்டில் நாளொன்றில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை முதல்முறையாக 200 ஐக் கடந்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று பதிவான கொரோனா மரணங்கள் 209 தை அடுத்து நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள மொத்த மரங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 157 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் உயிரிழந்த 209 பேரில் 108 ஆண்களும் 101 பெண்களும் அடங்குகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment