sajith 5
அரசியல்இலங்கைசெய்திகள்

“மக்கள் போராட்டத்தை இல்லாதொழிக்க கோட்டா போட்ட முடிச்சே இடைக்கால அரசு”

Share

“ராஜபக்சக்கள் உள்ளிட்ட அரசு வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றே நாட்டு மக்களும் போராடும் மக்களும் கோருகின்றனர். இந்நிலையில், இடைக்கால அரசு என்ற குண்டைக் கொண்டு வந்தது ஒரு சதியாகும்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

“மக்கள் போராட்டத்தைத் தோற்கடிக்க – அந்தப் போராட்டத்தை இல்லாதொழிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஒரு குழுவினரால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த இடைக்கால அரசு என்ற கயிற்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொருஉறுப்பினரும் சிக்கவில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அடக்குமுறை அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் கண்டியில் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைக்கான பேரணி ஐந்தாம் நாளான இன்று கொழும்பை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான மக்கள் இந்தப் பாத யாத்திரையில் கலந்துகொண்டுள்ளனர்.

யக்கலையில் நேற்று மாலை நான்காம் நாள் நடைபயணத்தை நிறைவு செய்து உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இடைக்கால அரசு தொடர்பில் சிலர் பரப்பிய நாடகத்தின் உண்மை இன்று அம்பலமாகியுள்ளது.

அரசு அச்சாறாகிட்டது. அச்சாறாகியுள்ள ஆட்சியில் இடைக்கால அரசை அமைப்பதற்கோ அல்லது பங்காளிகளாகுவதற்கோ ஐக்கிய மக்கள் சக்தி தயாரில்லை. இந்த நாடகம் குறித்து ஆரம்பத்திலேயே நான் அறிந்திருந்தேன்.

எதிர்க்கட்சித் தலைமைப் பதவியோ அல்லது அதற்கு அப்பாலான பெரிய பதவிகளோ எனக்கு ஆபரணங்கள் இல்லை.

அந்தப் பதவிகளுக்கு அடிபணிந்து மக்கள் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்கப் போவதில்லை.

மக்களின் போராட்டங்கள் மற்றும் அவர்களின் கோரிக்கைகளைச் சலுகைகளுக்காக காட்டிக்கொடுக்கும் பழக்கம் ஐக்கிய மக்கள் சக்திக்கு இல்லை.

ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டமானது, இந்நாட்டு மக்களுக்கு வெற்றியைக் பெற்றுக்கொடுக்கும்.

இன்று சிலர் நிதி சலுகைகளை வழங்கி, அரசை அமைக்க முயற்சித்தாலும், ஐக்கிய மக்கள் சக்தி அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியிலுள்ள எந்தவொரு உறுப்பினரும் இவ்வாறான சலுகைகளை நம்பி ஏமாறமாட்டார்கள்” – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...

vimaanam
இலங்கை

3 மணிநேரத்தினையும் கடந்த போராட்டம் – புறப்பட்ட விமானத்திற்கு நேர்ந்தது என்ன?

பறவை மோதியதில் விபத்தைச் சந்தித்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK-731 இதன் காரணமாகத் தனது பயணத்தைக்...

vimaanam
இலங்கை

பறவையால் தடைப்பட்ட விமானத்தின் பறப்பு!

  விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில்...